Last 7 years ADMK is in power in Tamil Nadu but Athikadavu avinashi project still not yet fully started, and it is delayed for several decades. Political parties in tamil nadu are cheating people with false statements. Please think before voting to ADMK and DMK and other cheating parties
அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர் மற்றும் புளியம்பட்டி பகுதிகளில் உள்ள முப்பத்தி ஒன்று ஏரிகள், நாற்பது ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர் நிலைகளில் நிரப்புவதன் மூலம், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாகும். இத்திட்டம் நிறைவேறும் போது இப்பகுதிகளில் வாழும் முப்பத்தி ஐந்து இலட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படும். மேலும் 1.30 இலட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
முதன் முதலில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி இப்பகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரப்ப கவுண்டர் தமிழக அரசிடம் 1957ஆம் ஆண்டில் கோரிக்கை வைத்தார்.
அறுபது ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி இப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தின்[2] விளைவாக, அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில், 2016 – 2017-ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு – செலவு திட்டத்தை 16 பிப்ரவரி 2016 அன்று தாக்கல் செய்கையில் தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்